"ஹலோ ரமேஷ் சொல்லு டா"
"நான் இனிக்கு நைட் சென்னை போறேன். Monday தான் வருவேன் டா." உருக்கமான குரலில் ரமேஷ் கூறினான்.
"நல்லா யோசிச்சு தான் நீ முடிவு பண்ணிற்பனு நம்பறேன் டா. "
".........."
"அப்ப நான் கோபிக்கு கால் பண்ணி நீ நாளைக்கு வரேன்னு சொல்றேன். நீ அவனோட தங்கிகோ. "
"thanks டா. "
"என்ன பிரச்சன வந்தாலும் கால் பண்ணு டா. "
"I will take care டா."
தனது இருக்கைக்கு வந்து அன்று இரவு ரயிலில் டிக்கெட் புக் செய்தான். இரவு உணவு சாப்பிட்டு ரயில் ஏறினான். ரயிலில் இருந்த வெறுமை அவனை ஏதோ செய்யது. தனது இருக்கையில் படுத்து கொண்டு கண் மூடினான். உறக்கம் அவனை நெருங்கவில்லை. கண் முன்னாடி அவளது முகம். மனதில் அவளது நினைப்பு.
******************************
ரமேஷும் புவனாவும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தார்கள். இருவருக்கும் இசையின் மீதிருந்த ஆர்வம் அவர்களை நண்பர்களாய் ஆக்கியது. கல்லூரியில் நடந்த அணைத்து இசை போட்டியிலும் அவர்கள் இருவரும் பாட, அவர்கள் குரல்கள் முதலில் சங்கமித்து. அவள் தனது பாட்டை பற்றி மட்டும் யோசிக்காமல் எல்லோரின் பாட்டும் நன்றாக வர வேண்டும் என்று நினைப்பாள். "இந்த தடவ உன் பாட்டு ரொம்ப சூப்பர் ஆக இருக்கனும். உனக்கு தான் முதல் பரிசு கிடைக்கணும்" என்று ரமேஷிடம் சொன்னாள்.
இதுவரை பட்டு பாடுவதை பொழுது போக்காய் நினைத்த ரமேஷ்க்கு அவளது வார்த்தை உற்சாகத்தை அளித்தது. தன் மேல் அக்கறை காட்டும் அவள் வருத்தப்பட கூடாது என்று நினைத்தான். தனது பாட்டை மெருகேத்தினான். இப்படியே நாட்கள் நகர, ரமேஷும் புவனாவும் ஜோடியாய் சென்றால் வெற்றி என்ற பேச்சு கல்லூரி முழவதும் பரவியது. அந்த வார்த்தைகளை ரமேஷும் நம்பினான்.
அவள் வார்த்தை அவனுக்கு உயிரளிக்க,
வெற்றியின் பாதையில் அவனை கொண்டு செல்ல,
நட்பு காதலாய் மாறுவதை அவன் உணர்ந்தான்.
"புவனா..."
அவளது கையில் இருந்த பாட்டு புத்தகத்தை பார்த்து கொண்டு "ஹ்ம்ம்..." என்றாள்.
"நீ என்கூட பாட அரம்பிச்சதுலேந்து, I think I have improved a lot."
"அதெலாம் இல்லே. அதெலாம் உன் திறமை..." புத்தகத்தில் இருந்து அவள் பார்வை விலக வில்லை.
"என் திறமைய எனக்கு முழுசா நீ தான் காட்டின ...."
"ok then. I am happy... " புன்னகையுடன் கூறினாலும் பார்வை மட்டும் புத்தகத்திலே இருந்துது.
"ஹே என்ன ஆச்சு உனக்கு... ஏன் இப்படிலாம் பேசற... come lets practise...". புவனா பாட தொடங்கினாள்.
"இந்த மாதிரி வாழ்கை பூரா நீ என்கூட இருந்தா, I will be the luckiest..."
"என்ன சொல்ற நீ...."
"I want you to be with me......... I think I have fallen in love with you...."
"............." வார்த்தைகள் இல்லை, ஆனால் அவளின் பார்வையில் ஒரு அதிர்ச்சி.
"ஏதாவது தப்பா சொல்லிடேனா?"
"தெரியல... நீ நல்லா பாடணும்னு நான் நெனெச்சேன்... அவ்ளோதான்... நீ சொல்ற மாதிரிலாம் நான் யோசிக்கல."
"அப்ப என்கூட எப்பயும் இருக்க மாட்டேன்னு சொல்றியா?"
"நான் இருந்தாலும் இல்லேனாலும் உன் மியூசிக் இருக்கணும்னு சொல்றேன். அவ்ளோதான். I have not thought about my future."
அவனது இசை அவளை ஈர்க்க,
அந்த இசையை எல்லோரும் ரசிக்க
அவள் கொடுத்த உற்சாகம்,
"உன்கூட எப்பவும் இருப்பேன் சொல்லேன்..."
"I am not feeling comfortable. I am leaving bye... "
"ஏதாவது ஒரு பதில் சொல்லிட்டு போ புவனா..."
"என்ன தனியா விட்டுடு.... please"
அன்று முதல் அவன் அவளிடம் எதுவும் பேசவில்லை... ஆனால் ரமேஷால் அவளை மறக்க முடியவில்லை. அவளிடம் பேசாமல் இருந்தானே தவிர, அவளுக்கு பிடித்த அவனது குரலை மெருகேற்ற தவறவில்லை... இப்படியே வருஷங்கள் ஓடின.
சில மாதங்களுக்கு முன்னால், அவள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் தான் அவனது நண்பன் பரத்தின் நண்பன், கோபி வேலை செய்கிறான் என்று தெரிய வந்தது. அதனால் அவளை பற்றி அடிக்கடி அவன் கோபியிடம் கேட்டு தெரிந்து கொண்டான்.
"ஹாய் கோபி..."
"ஹாய் சுரேஷ்... எப்படி இருக்க?"
"நான் நல்ல இருக்கேன் டா. நீ எப்படி இருக்க?"
"I am good டா.. புவனாவும் நல்லா இருக்கா." சுரேஷ் கேக்க நினைத்ததை கேட்காமலேயே கோபி அவன் எதிர் பார்த்த பதில் அளித்தான்.
"சரி டா. வேற ஒன்னும் விஷயம் இல்லே. அப்றமா call பண்றேன். Take care."
இப்படி தான் அவர்கள் தொடர்பு இருக்கும்.
******************************
ரயில் சென்னை வந்து சேர, ரமேஷ் தனது கண்களில் ஓரத்தில் இருந்த கண்ணீர் துளிகளை தொடைத்து கொண்டு, கோபியின் வீட்டை நோக்கி புறப்பட்டான். குளித்து முடித்து ஹோட்டல் சென்று இரண்டு தோசை சாபிட்டான். காலை மணி 8:30 ஆனது. புவனா வேலை செய்யும் அலுவலகத்துக்கு சென்றான். அவள் எப்பொழுதும் போல் 9:00 மணிக்கு வருவாள் என்று தெரியும். அவளது அலுவலகத்தை நெருங்கின பொது, ஒரு நொடி மனம் பட பட என்று அடித்தது. தனது உணர்ச்சிகளை அவளிடம் வெளிபடுத்த கூடாது என்று மனதில் நிச்சயம் செய்தான். அவளுக்கு தன்னால் முடிந்த வரை மன உறுதிய அளிக்க முடிவு செய்தான்.
உள்ளே சென்றான். அங்கு இருந்த பெண்ணிடம், புவனாவின் பெயரை சொல்லி, அவளை பார்க்க வேண்டும் என்று சொன்னான். அந்த பெண் புவனாவிடம் - "You have a visitor at the lobby" என்றாள். புவனா கீழே இறங்கி வந்தாள். அங்கே ரமேஷை பார்த்ததும், இத்தனை வருடமாய் அவள் மனதில் தேக்கி வெய்த உணர்வுகள் எல்லாம் அவள் கண்களில் கண்ணீராய் வெளிவர, அவள் அவனை நெருங்கினாள். ரமேஷ் அவளை வெளியில் அழைத்து சென்றான்.
"ரமேஷ்....." புவனாவால பேச முடியல
ஒரு குழந்தை போல் அவள் அவன் தோள் மேல் சாய்ந்தாள்.
ரமேஷின் கண்களில் கண்ணீர். இருவரும் இரண்டு நிமிடம் எதுவும் பேசாமல் தனது உணர்ச்சிகளை கொட்டினர்.
"சாப்டியா?" ரமேஷ் புவனாவை பார்த்து கேட்டான்.
இல்லை என்று அவள் தலை அசைத்தாள்.
"சரி வா. சாப்ட்டு வருவோம்."
"....."
இருவரும் 5 நிமிடம் மௌனமாய் நடந்தார்கள். அருகில் இருந்த ஹோட்டலுக்கு சென்று அவன் அவளுக்காக தோசை வாங்கினான்.
'சாப்பிடு."
"நீ சாப்டியா?"
"ஹ்ம்ம்..."
அவள் சாப்பிட, அவன் அவளது ஈர கண்களை பார்த்தான். அந்த நொடியில் முடிவு செய்தான் - 'இனி ஒரு நாள் அவள் இப்படி இருக்க கூடாதென்று.'
"ரொம்ப thanks ரமேஷ்." கண்களில் கண்ணீர்.
"வேண்டாம் புவனா. ஏற்கனமே என்னால முடியலே. உன்ன இப்படி 15 நாள் தனியா விட்டத நெனச்சா ...." அவன் தலை குனிந்தான்.
"உண்மையா ரமேஷ், இப்படி யார்கிட்டயாவது அழனும் போல இருந்தது...........ஆனா........ ஆனா யாரும் கூட இல்லே. ஏதோ எனக்குனு யாரும் இல்லாத மாதிரி..... அம்மாக்கு தைரியம் சொன்னேன். அவங்கள பாத்துகிட்டேன். ஆனா உள்ளே அழுதுட்டு இருந்தேன். உன்ன பாத்ததும் முடியலேடா...." விசும்பலுக்கு இடையே அவள் பேசினாள்.
"இனி உன்னை இப்படி தனியா விட மாட்டேன். நீயே என்ன போக சொன்னாலும்..."
அவள் அவனை பார்த்தாள்.
அந்த நொடியில் அவளும் முடிவு செய்தால் - 'இவனை விட்டு இனி நீங்குவதில்லை என்று.'
அவன் இசையின் இனிமையை ரசித்த அவள்,
அவனது மனதின் இனிமையை உணர,
கண்கள் இரண்டும் பேசிகொண்டன...
மௌனத்தின் துணையுடன்.
Edited to add: Pat on the back for me. this is my 50th post.
PS: Kindly let me know in case of any mistakes.